Tamilசினிமா

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடல் பற்றிய அறிவிப்பை வெளியிடும் படக்குழு

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.