Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற முதல் 20 ஓவர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வான் டெர் டுசன்56 ரன்னும், டி காக் 37 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான பிளட்சர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் அதிரடியில் கலக்கினார். அவர் 35 பந்தில்  7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 71 ரன் எடுத்து அவுட்டானார்.

கெயில் 32 ரன்னும், ரசல் 23 ரன்னும் எடுக்க இறுதியில், 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு அளிக்கப்பட்டது.