Tamilசெய்திகள்

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் – 7 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில் வாகனம் வெடித்து சிதறி சுக்குநூறானது.

இந்த தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இதில் யூனியன் கவுன்சில் தலைவர் இஷ்தியாக் யாகூப்பும் அடங்குவார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பஞ்ச்கூர் துணை கமிஷனர் அம்ஜத் சோம்ரோவ் கூறும் போது, பல்கத்தார் யூனியன் தலைவர் இஷ்தியாக் யாகூப் மற்றும் சிலர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது அவர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

பால்கதர் பகுதியில் வாகனம் சென்ற போது வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர் என்றார். தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பலூச் விடுமுறை முன்னணி பொறுப்பேற்றது. தற்போது நடந்துள்ள தாக்குதலிலும் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.