Tamilவிளையாட்டு

பெண்கள் ஐபிஎல் போட்டியால் திறமையான வீராங்கணைகளை கண்டறிய முடியும் – ஹர்மன் பிரீத் கபூர்

முதலாவது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கபூர் கூறியதாவது:-

ஆண்கள் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட் டிக்கு பிறகு வீரர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆண்கள் கிரிக்கெட்டில் நாம் பார்த்த திறமை வெளிபாட்டை பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பார்க்கலாம். இது இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும்.

பெண்கள் ஐ.பி.எல். மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். இது சர்வதேச அரங்குக்கு தயாராகும் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் பல இளம் மற்றும் திறமையான வீராங்கனைகளை இந்தியாவுக்கு கண்டறிய முடியும். நாங்கள் சில காலமாக தாக்குதல் ஆட்டத்தில் விளையாட முயற்சித்து வருகிறோம்.

ஆக்ரோஷமாக கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று அணி கூட்டங்களில் அடிக்கடி விவாதிப்போம். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்கள் அணுகுமுறையில் நாங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.