Tamilசெய்திகள்

மணிப்பூரில் 3 மாதங்களில் 3 பேர் மாயம் – வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பாத சோகம்

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் 3 மாதங்களில் 30 பேர் மாயமானது தெரியவந்துள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது. வன்முறை தொடங்கிய நேரத்தில் மே மாதம் 6-ந்தேதி சிங் என்பவர் (பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர், சமூக சேவகர்) மாயமாகியுள்ளார். அவருடன் யும்கைபாம் கிரண்குமார் சிங் என்பவரும் மாயமாகியுள்ளார்.

இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. இருவரும் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஒலிம்பிக் பார்க்கை ஒட்டியுள்ள சாஹெய்பங் பகுதியில் இருவரும் காரில் சென்றுள்ளனர். அதன்பின் அவர்களின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல் மே மாதத்தில் சுமார் 30 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. மாயமானவர்களை தேடிவருகிறோம். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மாயமான சிங் தனது மகனை விஞ்ஞானியாக்க விரும்பினார். அவர்கள் குடும்பம் மே மாதம் ஷில்லாங் செல்ல இருந்தது. அந்த நிலையில் தான் காணாமல் போகியுள்ளார்.

அவரது மகன் இதுகுறித்து கூறுகையில் ”எனது தந்தை கடின உழைப்பாளி, என்னை ஷில்லாங்கில் உள்ள இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி நிகழ்ச்சியில் என்னை சேர்க்க விரும்பினார்.” என்றார. அவரது மனைவி ”நாங்கள் எனது மகனை டெல்லியில் படிக்க வைக்க விரும்பினோம். எனது கணவர் மட்டும்தான் சம்பாதித்து வந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ள நிலையில், எப்படி குடும்பத்தை நிர்வகிப்பது எனத் தெரியவில்லை” என்றார்.

பத்திரிகையாளர் ஒருவர் காணாமல் போன நிலையில், இம்பாலில் ஜூலை 6-ந்தேதி ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜூலை 6-ந்தேதி ஊடரங்கு தளர்த்தப்பட்டதால், ஹிஜாம் லுவாங்பி என்ற 17 வயது மாணவி நீட் பயிற்சிக்காக வெளியில் சென்றுள்ளார். அவரை அவருடைய ஆண் நண்பன் அழைத்துச் சென்றுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரம் சென்றுள்ளனர். அவர்கள் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கில் இருவரும் நம்போல் நோக்கி சென்றுள்ளதாக சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சைபர்கிரைம் போலீசார் தரப்பில் கடைசியாக அந்த மாணவியின் செல்போன் குவாக்டா பகுதியிலும், அவரின் நண்பர் செல்போன் லம்டான் பகுதியிலும் சுவிட்ச் ஆஃப் ஆனதாக கூறப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு பகுதியாகும். குவாக்டா பிஷ்ன்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியாகும், லம்டான் சுரசந்த்புரில் உள்ளது. இரண்டு இடங்களுக்கும் இடையிலான இடைவெளி 18 கி.மீ. ஆகும். வன்முறை நடைபெற்ற முக்கியமான இடமாக இந்த இரண்டு இடமும் பார்க்கப்படுகிறது. அவள் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நான் போன் செய்தபோது, அவள் பேசினாள். நம்போலில் இருப்பதாக தெரிவித்த அவள், பயந்துபோய் இருந்தாள். இடம் தெரிந்தால், அவளது தந்தையை அனுப்பி வீட்டிற்கு அழைத்து வர முடியும் என்பதால் அவள் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு கேட்டேன். அதன்பின் அவளது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது” என அந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் அச்சப்படுகிறார்கள். மாணவியின் ஆண் நண்பர் செல்வோன் தற்போது உபயோகத்தில் உள்ளதாகவும், அவரது போனில் புதிய நம்பர் பயன்படுத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ”போனில் சிக்னல் கிடைத்த இடம் மெயின் ரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், போலீசார் அங்கு செல்ல தயங்குகிறார்கள்” என அந்த பையனின் தந்தை தெரிவித்துள்ளார். பழங்குடியின தலைவர்கள் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர், ”காணாமல் போனவர்களின் 44 உடல்கள் இம்பால் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்த உடல்களை அடக்கம் செய்வதற்காக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.