Tamilவிளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி – இந்திய வீரர் பிரனோய் சாம்பியன் பட்டம் வென்றார்

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், சீனாவின் வெங் ஹாங்யாங்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனோய் கைப்பற்றினார். 2வது சுற்றை 21-13 என சீன வீரர் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் 21-18 என பிரனோய் வென்றார்.

இதன்மூலம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.