Tamilசெய்திகள்

மாநாட்டின் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்! என கூறியுள்ளார்.

இப்பதிவுடன் 7 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் இணைத்துள்ளார்.