Tamilசினிமா

வசூல் சாதனை படைக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.

இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.