Tamilசெய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19 ஆம் தேதி 350 பேருந்துகளும், 20 ஆம் தேதி 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19 ஆம் தேதி 55 பேருந்துகளும், 20 ஆம் தேதி 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்தில் இருந்து 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் 2 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.