நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் பீகார் தேர்தல்
பீகார் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டிருக்க வேண்டும். இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
SIR-க்கு பிறகு பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 14 லட்சம் பேர் புது வாக்காளர்கள். தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான அடிப்படையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மற்றும் மற்ற பிளாட்பார்ம் மூலமாக போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
