நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்கும் பணிகள் தீவிரம் – டெல்லியில் முகாமிட்ட தமிழக அமைச்சர்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை முடுக்கிவிட, தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஏ. ராஜமோகன், கே. தென்னரசு மற்றும் ஆர். வினோத் ஆகியோர் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லக் கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கயிலாய மானசரோவர் யாத்திரை சென்றவர்களில் நேபாள எல்லையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக, முதல்வர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு சென்றுள்ள இந்த அமைச்சர்கள் குழு, மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் (Helpline: 9289516712) அங்குள்ள நிலவரங்களை உடனுக்குடன் கண்காணித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளையும், மீட்கப்பட்டவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகின்றனர்.
