Tamilசெய்திகள்

ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் (Hung Assembly), ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். அதேசமயம், பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற பரபரப்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதிமுக தலைமை இன்று ஆளுநரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம் அல்லது அதிகாரப் பகிர்வு ஏற்படக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் இப்போது லோக் பவன் நோக்கியே திரும்பியுள்ளது.