Tamilசெய்திகள்

அமைச்சர் தலையில் கொட்டியா சூடான பாயாசம்! – கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் தொடக்க விழாவின் போது, பேருந்தில் பயணித்த அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் எதிர்பாராதவிதமாகச் சூடான பாயாசம் கொட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தொடக்க விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பேருந்துக்குள் அனைவருக்கும் பாயாசம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பேருந்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக, அங்கு வைக்கப்பட்டிருந்த சூடான பாயாசம் தவறுதலாக அமைச்சரின் தலையில் சரிந்து கொட்டியுள்ளது.

இந்தத் திடுக்கிடும் சம்பவத்தால் பேருந்துக்குள்ளும் விழா நடந்த இடத்திலும் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.