கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.