Tamilசெய்திகள்

‘வெல்வோம் 200’ என்ற இலக்குடன் புதிய வரலாறு படைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஓசூர் பரப்புரையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

நேற்று இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பம் பகுதியில் மீனவச் சொந்தம் ஒருவரது இல்லத்தில் மீன் உணவருந்தி தனது அன்றைய பிரச்சாரத்தை நிறைவு செய்த அவர், இன்று அதிகாலையிலேயே அண்ணா நகர் பகுதிக்குப் புறப்பட்டுத் தனது அடுத்தகட்ட பரப்புரையைத் தொடங்கியுள்ளார்.

கருத்துக்கணிப்புகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும், ‘வெல்வோம் 200’ என்ற இலக்குடன் புதிய வரலாறு படைப்போம் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.