Tamilசெய்திகள்

இன்று தமிழக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 20) தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமையவுள்ள இந்தப் பயணத்தின் மூலம், தென் தமிழக வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.