தமிழ்நாடு அரசு பணியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து வர வேண்டும் என்ற புதிய அறிவிப்பை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என்ற தனது யோசனையை முதல்வர் ஜோசப் விஜயிடம் தெரிவித்ததாகவும், அதைச் சிறிதும் யோசிக்காமல் சிரித்துக்கொண்டே வரவேற்ற முதல்வர் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இனி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒரு நாள் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்; மேலும், அனைவரையும் ஒருங்கிணைத்துத் தனி அதிகாரிகளை நியமித்து உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
