Tamilசெய்திகள்

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான விமான எரிபொருல் மீதான மதிப்புக்கூட்டி வரியை 16 சதவீதமாகத் குறைத்த தமிழக அரசு

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகத் தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ₹17.55 சேமிக்கப்பட்டு, விமான நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹1.58 கோடியும், மாதத்திற்கு ₹47.4 கோடியும் மிச்சமாகும். இருப்பினும், இந்த வரிக்க குறைப்பின் பலனை விமான நிறுவனங்கள் பயணிகளுக்குக் கட்டணக் குறைப்பாக மாற்றினால் மட்டுமே பயணச்சீட்டு விலை குறையும்.

அதேவேளையில், இந்த வரி குறைப்பால் அரசுக்குச் சுமார் ₹570 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதுடன், சென்னை விமான நிலையத்தில் நிலவும் இடநெரிசல் மற்றும் ஓடுதள நேரமின்மை (Slots) காரணமாக புதிய விமானங்களை உடனடியாக இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

எனவே, வெறும் வரி குறைப்பு மட்டும் போதாது என்றும், சென்னையின் விமானப் போக்குவரத்து நெரிசலுக்குப் புதிய பரந்தூர் கிரீன்ஃபீல்ட் (Greenfield) விமான நிலையம் மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.