த.வெ.க அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக கவர்னர் அர்லேகர் இன்று காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வருகிறார். அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்கின்றனர்.
சட்டசபை கூட்ட அரங்குக்கு கவர்னர் அர்லேகர் வந்ததும் 10 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்கும். அப்போது அரசின் சார்பில் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள உரையை கவர்னர் அர்லேகர் வாசிப்பார். ஆங்கிலத்தில் இடம் பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
அதன் பிறகு கவர்னரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழி வாசிப்பார். அத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன் பிறகு அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும்.
