Tamilசெய்திகள்

தேவஸ்தானம் அமைப்பு குறித்து யோசிக்கும் தருணம் இது – சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,” தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்கும் தருணம் இது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், கோவில் அருகே கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துவது குறித்த மாற்று திட்டம் சம்பந்தமாக அறிக்கை தர அறநிலையத்துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.