தயாரிப்பாளரானது ஏன்? – விஷ்ணு விஷால் விளக்கம்
ராட்சசன் படத்துக்காக ரஜினியே போன் செய்து பாராட்டியதில் உற்சாகமாக இருக்கிறார் விஷ்ணு விஷால். அவர் தயாரிப்பாளராக மாறியதன் பின்னணி பற்றி கேட்டதற்கு ’நல்ல படங்கள்ல நடித்தேன்; அதுல சில படங்களில் எனக்கு பாதிச் சம்பளம்கூட கைக்கு வரவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமதான், ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க.
‘கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா… காணாமப் பேயிடுவீங்க’னு சம்பளம் தராத ஒரு தயாரிப்பாளர் சொன்னார். யோசிச்சா, அவர் சொல்றது சரின்னுதான் தோணுச்சு. அதை மாத்தத்தான், `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துல நடிச்சேன்.
அதுக்கு வேற ஒருத்தர்தான் தயாரிப்பாளர், சில பிரச்னைகளால நானே தயாரிக்க வேண்டியதா போயிடுச்சு. `கதாநாயகன்’ படத்துக்கும் அதே நிலைமைதான். இப்படி சினிமாவுல தொடர்ந்து எதையாவது கத்துக்கிட்டே இருக்கேன். சுருக்கமாச் சொல்லணும்னா, எனக்குத் தயாரிப்பாளர் ஆகணும்னு ஆசை கிடையாது, சூழ்நிலை ஆக்கிடுச்சு” என்று கூறினார்.