பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி – முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
Read More