tamil news

Tamilசெய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் செல் போனில் பேசிய நபர் வெடி குண்டு என்று சொன்னதால் கைது

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால் செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, “வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்” என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
Tamilசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் விருப்பம் பீகார் மேம்பாலம் போல் இடிந்து விழும் – அமைச்சர் ஸ்மிரிதி இரானி தாக்கு

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்’ என்று தெரிவித்தார். பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2- வது முறையாக

Read More
Tamilசெய்திகள்

எல்லை தாண்டி மேகாலாய கிராமத்திற்குள் நுழைந்த வங்காளதேச ராணுவ வீரர்களை விரட்டியடித்த கிராம மக்கள்

வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்து மேகாலயா மாநிலம் தெற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர். இந்தியா- வங்காளதேச சர்வதேச எல்லை வேலியை ஒட்டி அந்த கிராமம் அமைந்துள்ளது. அந்த வீரர்கள் துப்பாக்கி மற்றும் லத்திகள் வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களிடம்

Read More
Tamilசெய்திகள்

மகளின் திருமணத்தை எளிமையாக நடத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பரகலா வாங்மயிக்கு, பிரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று எளிமையான முறையில் வீட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண விழாவில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை அரசியல் ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையாக நடத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதமாரு மடத்தின் வேதமுறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.

Read More
Tamilசெய்திகள்

71 வது உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெறும் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், “71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது” என்றார்.

Read More
Tamilசெய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்திர பிரதேச முதலமைச்சர் இரங்கல்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கான ஹஜ் விமானம் இயக்கம்

டாடா குழுமத்தின் சர்வதேச பட்ஜெட் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஏஐஎக்ஸ்எல்) நேற்று இந்தியாவின் முதல் முழு பெண் ஹஜ் விமானத்தை இயக்கியது. இதில் சுமார் 145 பெண் யாத்ரீகர்கள் பயணித்தனர். இந்த சிறப்பு விமானத்தின், அனைத்து முக்கியமான விமானப் பணிகளிலும் முழுக்க முழுக்க பெண் குழுவினர் ஈடுபட்டுனர். இது இந்திய ஹஜ் கமிட்டியின் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்தது. முதல் முழு பெண் ஹஜ் விமானம் IX 3025, கோழிக்கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு ஜெட்டாவை

Read More
Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தான் துணை ஆளுநரின் இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு – 11 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Read More