Tamilசெய்திகள்

மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘எஸ்பிஆர் மார்க்கெட் ஆஃப் இந்தியா & மால் ஆஃப் மெட்ராஸ்’ திட்டம்!

சென்னையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு மையமாக உருவெடுத்து வரும் ‘எஸ்பிஆர் மார்க்கெட் ஆஃப் இந்தியா & மால் ஆஃப் மெட்ராஸ்’ (SPR Market of India & Mall of Madras) திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில், டைரக்டர்ஸ் கட் (Director’s Cut) மற்றும் ஐமேக்ஸ் (IMAX) வசதிகளுடன் கூடிய 9 திரைகளைக் கொண்ட பிவிஆர் மல்டிப்ளெக்ஸ் (PVR Multiplex) திரையரங்கம் அமையவுள்ளது.கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட நிகழ்வுகளை நடத்துவதற்காக 5,000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய வகையில் 1 லட்சம் சதுர அடியில் சென்ட்ரல் பிளாசா (Central Plaza) உருவாக்கப்படுகிறது.

சென்னை மின்ட் தெரு மற்றும் பாண்டி பஜார் போன்ற புகழ்பெற்ற வர்த்தக வீதிகளின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு, 9 பிரதான வர்த்தக மண்டலங்களில் 3,600-க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும், சிறுவர்களுக்காகவே 75,000 சதுர அடி பரப்பளவில் தனியாகப் பொழுதுபோக்கு மண்டலம் (Kids Entertainment Zone) ஒதுக்கப்பட்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, ஐஃபிளை இன்டோர் ஸ்கைடைவிங் (iFLY Indoor Skydiving), டிஜிட்டல் ஆர்ட் மியூசியம், வால்டோபியா அட்வென்ச்சர் பார்க் மற்றும் இன்டோர் கோ-கார்ட்டிங் ட்ராக் உள்ளிட்ட சர்வதேச அளவிலான நவீன பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.