Tamilசெய்திகள்

சென்னை காவல்துறைக்கு 50 புதிய மோட்டார் சைக்கிள்களை நன்கொடையாக வழங்கிய ஹோண்டா இந்தியா ஃபவுண்டேஷன்!

சென்னையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்வில், பெருநகரக் சென்னை காவல்துறைப் பணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஹோண்டா இந்தியா ஃபவுண்டேஷன் (Honda India Foundation) நிறுவனம் சார்பில் 50 புதிய ‘CB350’ ரக மோட்டார் சைக்கிள்கள் அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

காவல்துறைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரோந்து மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் இந்த நவீன வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு இந்த வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறவும் வாகனங்களிலேயே மைக் (In-built Mic) வசதி இணைக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பயன்பாட்டிற்காக மூன்று விதமான சிறப்பு விளக்குகள் (Emergency Lights), பாதுகாப்புப் பெட்டிகள் (Safety Boxes), கழற்றி மாட்டிக்கொள்ளக் கூடிய வகையிலான ரிமூவபிள் சூட்கேஸ் மற்றும் லைட் கண்ட்ரோல் வித் வால்யூம் அட்ஜஸ்டபிள் போன்ற அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாகனத்தின் முன்பகுதியில் நீண்ட வைசர் (Long Visor) போன்ற சிறப்பம்சங்களுடன் ஹோண்டா பிக் விங் (Honda Big Wing) மூலமாக இவை முழுமையாகத் தயாரிக்கப்பட்டுச் சென்னை காவல்துறைப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.