விஜயின் பிகில் படத்திற்கு கறிக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இரு தினங்களுக்கும் முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கறிக்கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ‘பிகில்’ படத்தில் தங்கள் தொழிலை அவமானப்படுத்தியதாகக் கூறி பிகில் பட போஸ்டரை கிழித்தெறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
‘பிகில்’ பட முதல் லுக்கில் விஜய் கறிக்கடையில் கறி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து அமர்ந்திருப்பதைப் போல் இருப்பதால் அது தங்கள் தொழிலை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.