Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சல் செந்தில் பாலாஜி மற்றும் குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனையில் கிடைக்கும் ஆவணங்களை பொறுத்து, அடுத்தக்கட்ட சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.