Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், கச்சனாவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ், செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ரஷியாவின் காரென் கச்சனாவ், அமெரிக்காவின் செபாஸ்டிகோர்டாவுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6, 6-3 என இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றபோது காயம் காரணமாக கோர்டா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கச்சனாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.