Tamilசெய்திகள்

தனியாக பயணிக்கும் பெண்களுக்கு போலீஸ் வாகனம்! – தமிழக காவல்துறை புதிய திட்டம்

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.

அதாவது, இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்கள் 1091, 112, 044-2345 2365, 044- 28447701 ஆகிய உதவி எண்களை அழைக்கலாம். ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துச் செல்லும்.

அனைத்து நாட்களிலும் இந்த சேவை இலவசம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.