Tamilசெய்திகள்

வேளாண் பட்ஜெட் : நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்

தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

* கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

* தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை பயிர் சேதத்திற்கு விரைவில் 208.20 கோடி நிதி வழங்கப்படும்.

* 2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” 2024-25ம் ஆண்டில் இந்த திட்டம் 22 இனங்களுடன், 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

* 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

* 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண் புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்

* நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்.

* மண்வளம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ் மண்வளம் இணைய தளம் வாயிலாக உரப்பரிந்துரை வழங்கப்படும்.

* 37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

* 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

* 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.