Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – ஸ்காட்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் மொராக்கோ அணிகள் மோதிய லீக் போட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு போஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.

போட்டி தொடங்கிய 2 வது மிடத்தில் மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் ஏற்படுத்தி கொடுத்த அசிஸ்ட்டை சரியாக பயன்படுத்திக் கொண்ட இஸ்மாயில் சாய்பரி கோல் அடித்தார். இதனால், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதை தொடர்ந்து போட்டியின் முதல் பாதி வரை இரு அணிகள் மேறிகொண்ட கோல் அடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதல் பாதியில் மொராக்கோ தொடர்ந்து முன்னிலை வகித்தது. போட்டியின் இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் போடவில்லை. ஸ்காட்லாந்து வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினாலும் அவர்களுக்கு அது பலன் தரவில்லை.

இதனால், இறுதி வரை இரு அணிகளும் கோல் போடாததால், மொரோக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.