தேர்தல் நடததை விதிமுறைகள் நடவடிக்கை – ரூ.1200 கோடிக்கு அதிகமான சொத்துகள் பறிமுதல்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 15-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்கள் பெருமளவில் சிக்கியுள்ளன.
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் என நேற்று வரை மொத்தம் 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
இதில் வருமான வரித்துறை மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) துறையினரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள நிலையில், மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்கள் இந்தப் பறிமுதல் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
ஜனநாயகத் திருவிழாவில் முறைகேடுகளைத் தடுக்க 5,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், இந்த மெகா பறிமுதல் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
