Tamilசெய்திகள்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலை ‘சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்’

மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனசூஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ், பருக்கள் மற்றும் எண்ணெய் பசை சருமத்தால் அவதிப்படுபவர்களுக்காக மிகவும் மலிவான விலையில் ‘சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்’ (Salicylic Acid Face Wash) அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாரியத்தால் (PMBI) சான்றளிக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த ஃபேஸ் வாஷ், 1% மற்றும் 2% ஆகிய இரண்டு வீரிய அளவுகளில் 60 மி.லி கொண்ட சிறிய டியூப்களில் முறையே வெறும் ₹47 மற்றும் ₹66 என்ற மிகக் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள ஜனசூஷதி மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சந்தையில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனங்களின் இதே போன்ற ஃபேஸ் வாஷ்கள் ₹150 முதல் ₹400 வரை விற்கப்படும் நிலையில், அதே மருத்துவத் தரத்துடன் (WHO-GMP certified) மிகக் குறைந்த விலையில் அரசு இதனை வழங்குகிறது. சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகளை ஆழமாக நீக்கி, அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்திப் பருக்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஃபேஸ் வாஷ், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கான தரமான மருத்துவத் தயாரிப்பாகப் பார்க்கப்படுகிறது.