திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்? – விசிக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நேற்று முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று தனது முடிவை திருமாவளவன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசிக அலுவலகத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் வர உள்ளதாக கூறப்பட்டது. இதனால், திருமாவளவன் தனது முடிவை அறிவிப்பார் என தமிழகமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவை அறிவிப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், திருமாவளவனின் முட்டிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த த.வெ.க தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
