பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேயர் பிரியா நேரில் ஆய்வு
தொடர் கனமழை மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சென்னை மாநகரில் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜயின் தொகுதியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தொகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள், வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
