Tamilசெய்திகள்

த.வெ.க தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாம்பலம் தொகுதி வேட்பாளர் ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அப்புனு ஆகியோருடன் இணைந்து விஜய் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமான கூட்டத்தைக் கூட்டியதாகவும், சாதாரணப் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பதிலாக அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தி பொதுமக்களுக்குக் கடும் போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், விதிகளை மீறியதற்காக இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.