பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், த”புனிதமான இந்தத் தமிழ் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும், சிறந்த ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், இந்தப் பெருநாளின் சிறப்பைக் குறித்து அவர் கூறுகையில்: இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களுக்கான கொண்டாட்டமாகும். தமிழ்ப் பண்பாட்டின் இலக்கியம், இசை, கலை, தத்துவம் மற்றும் பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். “மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை எட்டுவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
