ஸ்டார்லிங் போன்ற சேவையை 2027-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ரஷ்யா!
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைகோள் பிராட்பேண்ட் அமைப்பின் சிறிய அளவிலான தனது சொந்த பதிப்பை வரும் 2027 ஆம் ஆண்டு ரஷ்யா தொடங்க திட்டமிட்டுள்ளதாக, அந்த சேவையை உருவாக்கி9 வரும் இக்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி ஷெலோப்கோவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பொருளாதார மன்றத்தில் நடந்த ஒரு குழு விவாதத்தில் அவர் கூறுகையில், “நல்ல செய்தி என்னவென்றால், அது ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டு வருகின்றன.
வரும் வாரங்களில், நாங்கள் சோதனைகளை தொடங்குவோம், வாக்குறுதி அளித்தபடி 2027 ஆம் ஆண்டு அது வணிகரீதியாக செயல்பட தொடங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
