Tamilசெய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகல்!

ஆப்பிள் நிறுவனத்தை கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமையேற்று வழிநடத்தி, அதன் சந்தை மதிப்பை சுமார் 4 டிரில்லியன் டாலர் (சுமார் $3.6 டிரில்லியன் உயர்வு) அளவிற்கு உயர்த்திய டிம் குக் (Tim Cook), தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக, தற்போது ஹார்டுவேர் பிரிவின் தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் (John Ternus) பொறுப்பேற்க உள்ளார்.

பதவியிலிருந்து விலகினாலும், டிம் குக் ஆப்பிள் நிர்வாகக் குழுவின் தலைவராக (Executive Chairman) தொடர்ந்து நீடிப்பார். ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத்தை உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றிய டிம் குக்கின் சகாப்தம் முடிவுக்கு வருவது, தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.