Tamil

Tamilசெய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்ன்.என்.ரவி ஒப்புதல்

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல் செய்த மேலமுறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பங்கஜ் மித்தல்,எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட சுப்ரீம் கோர்ட், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இரு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கவர்னருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மொழியாக்கம் கிடைக்கப் பெற்ற உடனே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read More
Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த டோனி!

ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Read More
Tamilசெய்திகள்

‘குட் பேட் அக்லி’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர் திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

என்.சி.இ.ஆர்.டி-யில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது – காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம்

மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய

Read More
Tamilசெய்திகள்

NCERT புத்தகங்களுக்கு இந்தி பெயர்கள் – எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், NCERT புத்தகங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?” என்று பதிவிட்டுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

நாசா அதிகாரியாக பணியாற்றி வந்த நீலா ராஜேந்திரா பணி நீக்கம்!

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார். நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது. அதன்படி அவரது பதவியை ‘குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்’ என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறத இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது. அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது. நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது – பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது. அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது. எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

Read More
Tamilசெய்திகள்

பா.ஜ.க உடன் கூட்டணி வைத்தது வருத்தளிக்கிறது என்று கூறிய அதிமுக நிர்வாகிக்கு பா.ஜ.க நிர்வாகி கண்டனம்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.யுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது உறுதியாக தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்று கூறி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றார். மேலும், கூட்டத்தில் திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வணக்கம், குணசேகரன் அண்ணா உங்களுக்குத்தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படவேண்டியதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு. குணசேகரன் அண்ணா உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன். நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற வார்டுக்குள் இன்றைக்கு நீங்க எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 484 வாக்கு பா.ஜ.க. வாங்குகிறது. இதுக்கு என்ன சொல்றீங்க? நீங்கள் தோற்றதுக்கும், பேசுறதுக்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிக்கிறீர்கள். இது நல்லது இல்லைங்க அண்ணா… நீங்க தோற்றதுக்கு காரணம் பா.ஜ.க.வா? 3 முறை வெற்றி பெற்ற இடத்தில் ஏன் தோற்றீர்கள்? என்ன காரணம்? பா.ஜ.க. இல்லாததால் என்றார்.

Read More
Tamilசெய்திகள்

வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க, பா.ஜ.க. பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது! சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்கள். மாநில உரிமைகளைக் காக்கவும் -அதனை உறுதி செய்யவும் ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்து அறிவித்துள்ளார்கள். ஒன்றியத்தில் ஆள்வோர் அதிகாரக் குவியலில் ஈடுபடும் போதெல்லாம் தமிழ்நாடு தனது அழுத்தமான உரிமைக் குரலை எழுப்பி வருகிறது. மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது. இந்த முக்கிய அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிடும் முன்னரே அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து அழிக்க முடியாத களங்கத்துக்கு ஆளாகி உள்ளனர். பாஜக உறுப்பினர்களையும் முந்திக் கொண்டு அவையை விட்டு வெளியேறி எஜமானர்களுக்கு தங்களின் அடிமை விசுவாசத்தை காட்டி உள்ளனர். ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய மாநிலங்களின் குரலாக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

பாஜக தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்க ளுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரி வித்து இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. இம்ரான் பிராப் கர்ஹி கூறியதாவது:- பிரதமருக்கு இது போன்ற கருத்து பொருத்தமானதல்ல. நீங்கள் காங்கிரசை பார்த்து முஸ்லிம்கள் அனுதாபிகள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்களா? இல்லையென்றால் முக்தர் அப்பாஸ் நக்வி, ஷாவாஸ் உசேன், எம்.ஜே.அக்பர், ஜாபர் இஸ்லாம் ஆகியோரை குப்பை தொட்டியில் போட்டது ஏன்? வக்பு திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் பாராளுமன்ற மக்களவையில் அதைமுன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மக்களவை அல்லது மேல்சபை, மாநில சட்டசபைகளில் உங்களிடம் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் கூட இல்லை என்று அவர் கூறினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஹிரினேட் கூறும்போது, “பாஜகவில் ஏன் தலித் முதல்வர் இல்லை” என்று கேள்வி எழுப்பினார். சமாஜ்வாதிகட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபுஆஸ்மி கூறும்போது, “பாஜக தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

Read More