ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு! – பயணிகள் அதிர்ச்சி
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் மக்கள் வாக்களிக்கச் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளதைச் சாதகமாக்கி, தனியார் ஆம்னி பேருந்துகள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் 10,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவற்றில் முன்பதிவு கிடைக்காதவர்கள் வேறு வழியின்றித் தனியார் பேருந்துகளை நாடும்போது, சென்னை முதல் மதுரை வரை ரூ. 3,500 வரையிலும், நெல்லைக்கு ரூ. 3,000 வரையிலும் கட்டணம் எகிறியுள்ளது. குறிப்பாகத் திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதால், ஜனநாயகக் கடமையை ஆற்றச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
