முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக தலைமைச் செயலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டு நெறியையும் வாழ்வியல் வழிமுறைகளாகக் கொண்டு, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மக் கொள்கைகளுக்காகத் தொண்டாற்றிச் சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பேன் என்ற சமூக நீதி நாள் உறுதிமொழியை முதலமைச்சர் விஜய் வாசிக்க, அமைச்சர்கள், அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர்.
